Sunday, March 8, 2009

பட்டுகோட்டை அழகிரி ஒரு பாடலுக்கு 8 நாயகிகள் !


ஆந்திராவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற கிங் தெலுங்கு திரைப்படம் ‘பட்டுகோட்டை அழகிரி’ என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது. இதில், நாகார்ஜுனா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் சாயாஜி ஷிண்டே, பிரம்மானந்தம், ஸ்ரீஹரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஓர் அப்பாவியின் சொத்தை அபகரிக்க முயலும் வில்லன் கோஷ்டியை கதாநாயகன் அழிப்பதே கதை. இதை பக்கா மசாலாப் படமாக இயக்கியுள்ளார் சீனு. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலுக்கு த்ரிஷா, அனுஷ்கா, ஜெனீலியா, ப்ரியாமணி, சார்மி, காம்னா, சினேகா உல்லால், மம்தா என 8 நாயகிகள் நாகார்ஜுனாவோடு நடனமாடியிருக்கிறார்கள். பட்டுகோட்டை அழகிரி மார்ச் மாதம் வெளிவருகிறார்...

No comments: