Sunday, March 8, 2009

பாத்திமா பேகம் ஆனார் ராஜஸ்ரீ!


அன்சாரி ராஜா என்பவரை காதலித்து ரகசியத் திருமணம் செய்து கொண்ட நடிகை ராஜஸ்ரீ இப்போது கணவருக்காக இஸ்லாம் மதத்திற்கே மாறி விட்டார்.
கருத்தம்மா படத்தில் அறிமுகமானவர் ராஜஸ்ரீ. மாதவி என்ற இயற்பெயர் கொண்ட இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
திரைப்பட வாய்ப்புகள் குறைந்த விட்ட நிலையில் டி.வி., தொடர்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் தான் நீண்ட காலமாக காதலித்து வந்த அன்சாரி ராஜா என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார் அவர்.
இதனால் ராஜஸ்ரீயின் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளதாகத் தகவல்.
இந்நிலையில், ராஜஸ்ரீ இஸ்லாம் மதத்திற்கே மாறி விட்டாராம். தனது பெயரையும் பாத்திமா பேகம் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இனி சினிமா, டி.வி., தொடர்கள் எதிலும் ராஜஸ்ரீ… ஸாரி பாத்திமா பேகத்தை பார்க்க முடியாது. நல்ல குடும்பத் தலைவியாக அவர் மாறிவிட்டார்.

No comments: