
தென்னக சினிமாவில் இருந்து இந்தி சினிமாவுக்கு ஏற்றுமதியாகி இருக்கும் நடிகை அசின், அடுத்ததாக ஜப்பானிய மொழி திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, ஜப்பான் மொழிகளில் உருவாகவுள்ள திரைப்படம் ‘நைன்டீன்த் ஸ்டெப்’. பாலிவுட் இயக்குநர் பரத் பாலா இயக்குகிறார். ஜப்பானிய நடிகர் தடானோபு அஸானோ கதாநாயகனாக நடிக்கிறார்.
இதில் பாரம்பரியமிக்க இந்தியப் பெண் வேடத்தில் நடிக்கும் அசின், படத்தின் கதைப்படி களரிச் சண்டை போடுகிறார். இதற்காக கேரளாவில் கோட்டயம் பகுதியில் உள்ள களரிச் சண்டை நிபுணர்களிடம் முறைப்படி களரிச் சண்டையை அசின் கற்க உள்ளார்(நீங்க பார்த்தாப் போதாதா?).
தற்போது ‘லண்டன் ட்ரீம்ஸ்’ இந்தி படத்தில் நடித்து வரும் அசின், ஏப்ரல் மாதம் கேரளத்துக்கு வந்து களரிப் பயிற்சியைத் தொடங்குகிறார்.
இந்தப் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஜூன் மாதம் தொடங்கவுள்ள இந்தப் படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.

No comments:
Post a Comment