
முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிரமாண்ட பாராட்டு விழா சென்னையில் நடக்கிறது. வருகிற 28ந்தேதி நடக்க உள்ள இந்த பாராட்டு விழாவில் தமிழகத்தின் அனைத்துத் துறை பிரமுகர்களும் பங்கேற்கிறார்கள். ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இரட்டை ஆஸ்கர் வென்று வந்த ரஹ்மானுக்கு முதல்வர் கருணாநிதி ஏற்கனவே பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்து முதல்வர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மானை கவர்னர் மாளிகைக்கு அழைத்து தேநீர் விருந்து அளித்து கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா கவுரவித்தார். இந்த விருந்தில் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரினாபேகம் உள்பட ரகுமானின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, கவர்னர் சுர்ஜித் சிங் பொன்னாடையும், நினைவுப்பரிசும் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னர் பி.சி.அலெக்சாண்டர், ஒரிசா மாநில முன்னாள் கவர்னர் எம்.எம்.ராஜேந்திரன், அவரது மனைவி சுசீலா, ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment